உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / செட்ஆப் பாக்ஸ் வாங்க வங்கி கடன் வாய்ப்பு 

செட்ஆப் பாக்ஸ் வாங்க வங்கி கடன் வாய்ப்பு 

கோவை,; தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.,நிறுவனம் சார்பில், கேபிள் டி.வி., ஆபரேட்டர்கள் கலந்துரையாடல் கூட்டம், கோவையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி., நிறுவனத்தின் பொது மேலாளர் துரை பேசியதாவது: கோவை மாவட்டத்தில், அரசு கேபிள் டி.வி., நிறுவனத்தின் இணைப்பு குறைந்து கொண்டே வருகிறது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க, ஆபரேட்டர்கள் முழு முயற்சி எடுக்க வேண்டும். ஹெச்.டி., டிஜிட்டல் 'செட்ஆப் பாக்ஸ்' இலவசமாக கொடுக்க வேண்டும் என, ஆபரேட்டர்கள் கேட்டு வருகின்றனர். இலவசமாக கொடுக்க முடியாது. 500 பணம் செலுத்திதான் பெற வேண்டும். ஆபரேட்டர்களின் நிதி பிரச்னையை கருத்தில் கொண்டு, ஹெச்.டி., டிஜிட்டல் 'செட்ஆப் பாக்ஸ்' வாங்க, வங்கி மூலம் இரண்டு லட்சம் ரூபாய் கடன் வழங்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரும்புவோர் விண்ணப்பம் செய்து வாங்கி கொள்ளலாம்.இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ