தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு சிறந்த பெண் ஆளுமை விருது
கோவை;கோவை கே.ஜி.மருத்துவமனையில், 'பெண் மருத்துவர்கள் நலன்' குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு, மருத்துவமனை தலைவர் பக்தவத்சலம், 'சிறந்த பெண் ஆளுமைக்கான' விருதை வழங்கினார். விருது பெற்ற தமிழிசை பேசியதாவது:மருத்துவமனை கட்டணங்களை சமாளிக்க, காப்பீட்டு திட்டங்கள் உள்ளன. பிரதமரின் ஆயுஷ்மான் காப்பீட்டு திட்டத்தின் வாயிலாக, ரூ.5 லட்சம் வரை பெரிய மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற முடியும். காப்பீட்டு திட்டங்களை பிரபலப்படுத்த வேண்டும். பணம் இல்லாததால், சிகிச்சை பெற முடியாது என்ற நிலை மாற வேண்டும்.டாக்டர்களின் ஓய்வு குறித்தும், அவர்களின் கழிப்பிட வசதிகள் குறித்தும் யாரும் கவலைப்படுவதில்லை. 'பிரதமர் ஸ்வச் பாரத்' வாயிலாக கிராமங்களில் கூட, கழிப்பிட வசதிகள் இருக்கும் போது, அரசு மருத்துவமனைகளில் எப்படி இல்லாமல் போகும்?ஆன்லைன் மருந்து வசதி, அவசர தேவைக்கு பயனுள்ளதாக அமையும். அதே சமயம், தடை செய்யப்பட்ட மருந்துகளை, அதில் விற்பனை செய்வதை தடுப்பது குறித்து, மருத்துவ உலகு ஆராய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.