பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
மேட்டுப்பாளையம் : காரமடையில் உள்ள அருள்மிகு செல்வ விநாயகர் மற்றும் மலையாள பகவதி அம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.காரமடை ஊராட்சி ஒன்றியம் மருதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கா. புங்கம்பாளையத்தில், அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோவில் மற்றும் மலையாள பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில்களில் வரும் 6ம் தேதி மகா கும்பாபிஷேகம் விழா நடக்க உள்ளது. இதையடுத்து, நேற்று மாலை, முளைப்பாரி மற்றும் தீர்த்த குடம் எடுத்து வருதல், காப்பு கட்டுதல், யாக சாலை பிரவேசம், முதற்கால வேள்வியில் 108 மூலிகை பொருட்கள் கொண்டு ஹோமம், மகா தீபாராதனை உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன.இதில் தர்மகர்த்தா திருமப்பகவுடர், ஊர் கவுடர் ஜெயபாலசுப்பிரமனியம், மருதூர் ஊராட்சி தலைவர் பூர்ணிமா, விழா கமிட்டியார், ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.