| ADDED : ஜூலை 30, 2024 11:12 PM
கோவை;கோவை சரவணம்பட்டியில் உள்ள பி.பி.ஜி., பிசியோதெரபி, பார்மசி கல்லுாரி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. பி.பி.ஜி.,கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் தங்கவேலு வரவேற்றார். தாளாளர் சாந்தி, துணைத்தலைவர் அக்சய் முன்னிலை வகித்தனர்.பட்டங்களை வழங்கி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., பல்கலை துணைவேந்தர் நாராயணசாமி பேசுகையில்,''பிசியோதெரபி, பார்மசி கல்வி, காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப முக்கியத்துவம் பெற்றது. இரண்டுக்கும் இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் தேவைகளும், சேவைகளும் அதிகரித்து வருகின்றன. மருத்துவம் சார்ந்த கல்விக்கு முக்கியத்துவமும் அங்கீகாரமும் கிடைத்துள்ளன. இளம் தலைமுறையினர் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.பிசியோதெரபி துறை சார்ந்த 450 மாணவ, மாணவியர் பட்டம் பெற்றனர். பார்மசி துறையில் 150 மாணவர்கள் பட்டம் பெற்றனர். முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டன.விழாவில், பிசியோதெரபி கல்லுாரி முதல்வர் சிவக்குமார், பார்மசி கல்லுாரி முதல்வர் சாம், செயல் இயக்குனர் அமுத குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.