உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இரு வாயில்களிலும் வெளியேறும் பஸ்கள்  அதிகரிக்கும் நெரிசல் 

இரு வாயில்களிலும் வெளியேறும் பஸ்கள்  அதிகரிக்கும் நெரிசல் 

பொள்ளாச்சி:பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்டில், இருந்து இரு வாயில்கள் வழியாகவும் பஸ்கள் வெளியேறுவதால், நெரிசல் அதிகரிக்கிறது.பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள, நெரிசலை தவிர்க்கும் வகையில், சப் - -கலெக்டர் அலுவலகம் எதிரில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் புது பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது.பழைய பஸ் ஸ்டாண்டில், கோவை, பழநி, திருப்பூர் செல்லும் பஸ்களும்; புது பஸ் ஸ்டாண்டில், கிராமப்பகுதிகளுக்கு இயக்கப்படும் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.ஆனால், புது பஸ் ஸ்டாண்டில் இதுவரை, அடிப்படை வசதிகள் கூட மேம்படுத்தப்படாமல் உள்ளது. நான்கு டிராக்குகளில், போதுமான இருக்கை வசதி கிடையாது.இது ஒருபுறமிருக்க, பஸ் ஸ்டாண்டில் உள்ள இரு வாயில்கள் வழியாகவும், பஸ்கள் வெளியேறுவதால், ரோட்டில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.தன்னார்வலர்கள் கூறியதாவது:புது பஸ் ஸ்டாண்டில், கிழக்கு மற்றும் வடக்கு திசையில் வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கிழக்கு வாயில் வழியாக பஸ்கள், ஸ்டாண்டிற்குள் செல்ல வேண்டும். ஊர்களுக்கு புறப்படும் பஸ்கள், வடக்கு வாயில் வழியே வெளியேறும். இதனால், அப்பகுதியில், போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டது. ஆனால், சமீபகாலமாக, கிழக்கு வாயில் வழியாகவும் பஸ்கள் வெளியேறுகின்றன. ஒரே நேரத்தில் உள்ளேயும், வெளியேயும் பஸ்கள் செல்ல முடியாதபோது, போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.மேலும், கிழக்கு வாயில் வெளியே வரும் பஸ்கள், அங்கு முறையாக திருப்ப முடியாத நிலை ஏற்படும் போது, பிற வாகன ஓட்டுகள் பரிதவிக்கின்றனர்.பழைய பஸ் ஸ்டாண்டில் கட்டுமானப் பணி தொய்வாக உள்ள நிலையில், உடுமலை, தாராபுரம் நோக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் டவுஸ்பஸ்கள், புது பஸ்டாண்டில் நிறுத்தப்படுவதே காரணம். பஸ்களின் இயக்கத்தை முறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை