உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புற்றுநோய் பாதித்த குழந்தைகள் கிரிக்கெட் அணி வீரர்கள் ஆறுதல்

புற்றுநோய் பாதித்த குழந்தைகள் கிரிக்கெட் அணி வீரர்கள் ஆறுதல்

கோவை;புற்றுநோய் சிகிச்சை பெறும் குழந்தைகளை சந்தித்து இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஆறுதல் கூறினர்.புச்சி பாபு கிரிக்கெட் போட்டிக்காக இந்திய கிரிக்கெட் அணி 'டி20' கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட மும்பை அணி வீரர்கள் கோவை வந்துள்ளனர். இவர்கள் ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இலவச புற்றுநோய் சிகிச்சை பெற்றுவரும், 14 குழந்தைகளை நேரில் சந்தித்தனர்.அப்போது, சிவப்பு ரோஜாக்களை வழங்கி குழந்தைகள் வரவேற்றனர். தொடர்ந்து, மினி கிரிக்கெட் பேட்களில் வீரர்கள் கையொப்பமிட்டு குழந்தைகளுக்கு பரிசாக கொடுத்து உரையாடினர்.தங்களுக்கு பரிசளித்த வீரர்களுக்கு சூர்யகுமார் யாதவ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் உருவப்படங்களை நினைவுப் பரிசுகளாக வழங்கினர். குழந்தைகள் அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்திய விளையாட்டு வீரர்கள், சிகிச்சை முறைகள் குறித்து ஆராய்ச்சி மைய இயக்குனர் குகனிடம் கேட்டறிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ