உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓட்டுச்சாவடிகளில் சி.சி.டி.வி., கேமரா

ஓட்டுச்சாவடிகளில் சி.சி.டி.வி., கேமரா

தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஓட்டுச்சாவடிகளை கண்காணிக்க, ஓட்டுச்சாவடிகளில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்ட, தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதியில், மொத்தம், 312 ஓட்டுச்சாவடிகள் உள்ளது. பதட்டமான ஓட்டுச்சாவடிகள், முக்கிய இடங்களில் கண்காணிக்க வேண்டிய ஓட்டுச்சாவடிகளில், பாதுகாப்பு காரணம் மற்றும் குளறுபடிகள் நடப்பதை தடுக்க சி.சி.டி.வி., கேமராக்கள் நேற்று பொருத்தப்பட்டன. தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதியில் மொத்தம் உள்ள 312 ஓட்டுச்சாவடிகளில், 243 இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ