உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊராட்சி செயலர்கள் கூண்டோடு மாற்றம்

ஊராட்சி செயலர்கள் கூண்டோடு மாற்றம்

அன்னுார்;அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில், எட்டு ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அன்னுார் வட்டார வளர்ச்சி அலுவலர் பிறப்பித்துள்ள உத்தரவு: அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சி செயலர் வசந்த கோகிலா, கரியாம்பாளையம் ஊராட்சிக்கு மாற்றப்பட்டுள்ளார். கரியாம்பாளையம் நாச்சிமுத்து, கணுவக்கரை ஊராட்சி; கணுவக்கரை பழனிசாமி, அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சிக்கு, பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குன்னத்தூர் ஊராட்சி செயலர் ஈஸ்வரன், அ.மேட்டுப்பாளையம் ஊராட்சி; அ.மேட்டுப்பாளையம் ராஜேந்திரன், குன்னத்தூர் ஊராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பசூர் ஊராட்சி செயலர் ராஜேஷ் குமார், காரேகவுண்டன் பாளையம் ஊராட்சி; காரே கவுண்டம் பாளையம் ஊராட்சி செயலர் ராஜகோபால், அல்லப்பாளையம் ஊராட்சிக்கு மாற்றப்பட்டுள்ளனர். நாரணாபுரம் ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன், பசூர் ஊராட்சிக்கு மாற்றப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை