மொண்டிபாளையம் கோவிலில் இன்று தேரோட்டம்
அன்னுார், : மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவிலில் இன்று தேரோட்டம் நடக்கிறது.மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலில், 58ம் ஆண்டு தேர்த் திருவிழாவில் கடந்த 4ம் தேதி, கொடியேற்றம் நடந்தது. நேற்று முன்தினம் காலை, அம்மன் அழைத்தலும், சுவாமி திருக்கல்யாண உற்சவமும் நடந்தது.இன்று (10ம் தேதி) காலை 8:00 மணிக்கு பெருமாள் தேருக்கு எழுந்தருகிறார். காலை 11:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. அறநிலையத்துறை அதிகாரிகள் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுக்கின்றனர். இரவு பரிவேட்டையும், வரும் 12ம் தேதி இரவு தெப்ப தேரோட்டமும் நடைபெறுகிறது.