கோவை- - தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில்
கோவை;பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கோவை மற்றும் ஜார்க்கண்ட் - தன்பாத் இடையே வாராந்திர சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று முதல் வரும் 2025 ஜன., 1ம் தேதி வரை வாரம்தோறும் புதன்கிழமைகளில், தன்பாத்தில் இருந்து, காலை 10:10 மணிக்கு இந்த ரயில் (எண்: 03325) புறப்பட்டு, வெள்ளிக்கிழமை மதியம் 12:30 மணிக்கு கோவையை வந்தடையும்.கோவையில் இருந்து இந்த சிறப்பு ரயில் (எண்: 03326) வரும் 7ம் தேதி முதல் 2025 ஜன., 4ம் தேதி வரை சனிக்கிழமை தோறும் மதியம் 12:55 மணிக்கு புறப்பட்டு, தன்பாத்தை திங்கள்கிழமை மாலை 5:10 மணிக்கு சென்றடையும்.இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், நெல்லூர், விஜயவாடா, ஜபல்பூர் உள்ளிட்ட 29 ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.