உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை போலீசின் போலீஸ் அக்கா திட்டம்: மாநிலம் முழுவதும் செயல்படுத்த அறிவுரை

கோவை போலீசின் போலீஸ் அக்கா திட்டம்: மாநிலம் முழுவதும் செயல்படுத்த அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை : கோவை மாநகர போலீசாரின் 'போலீஸ் அக்கா' திட்டத்தை மாநில அளவில் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.கல்வி நிறுவனங்களில் பாலியல் ரீதியாக பெண்கள், மாணவியர் துன்புறுத்தப்படுவதை தடுக்க நேற்று தலைமை செயலாளர் முருகானந்தம் வீடியோ கான்பரன்சிங் கூட்டம் நடத்தினார். கோவை நிர்மலா கல்லுாரியில், இக்கூட்டம் நடந்தது.கூட்டத்தில், அனைத்து கல்லுாரிகளிலும், உள்ளூர் புகார் குழு(ஐ.சி.சி., கமிட்டி) இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதில் தெரிவிக்கப்படும் புகார்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மாணவர்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு கல்லுாரியிலும் போதை தடுப்பு கமிட்டி கட்டாயம் ஏற்படுத்த வேண்டும். மாதம் ஒரு முறை, அதன் செயல்பாடுகள் தணிக்கை செய்யப்பட வேண்டும். மாணவர்களுக்கு ஆலோசகர்கள் நியமித்து கல்வி, அவர்களது சொந்த பிரச்னைகள், கல்வி மேம்பாட்டுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். அவர்கள் தவிர, மாணவர்கள் தங்களது சக வயதுடையவர்களிடம் பகிரும் விதமாக மாணவர்கள் இருவரை ஆலோசகர்களாக நியமிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாதந்தோறும், உயர் மட்ட அளவில் உள்ள அலுவலர்கள் கல்லுாரிகள், விடுதிகள் உள்ளிட்டவற்றில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, கூட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் சுயநிதி கல்லுாரிகளின் முதல்வர்கள், மருத்துவக் கல்லுாரி டீன்கள், இன்ஜினியரிங் கல்லுாரி, வனக்கல்லுாரி, பாரா மெடிக்கல், நர்சிங் கல்லுாரிகளின் முதல்வர் என, 700 பேர் பங்கேற்றனர். கலெக்டர் கிராந்திகுமார், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், எஸ்.பி., கார்த்திகேயன், மண்டல கல்லுாரி கல்வி இயக்குனர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

'போலீஸ் அக்கா' திட்டம்

கோவையில் செயல்படும் அனைத்துக்கல்லுாரிகளிலும், ஒரு பெண் போலீஸ் தொடர்பாளர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். கல்லுாரி மாணவிகள் ஏதாவது ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டால், தயக்கமின்றி அவரிடம் முறையிடலாம். சட்டரீதியான நடவடிக்கை மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க பெண் போலீஸ் நடவடிக்கை எடுப்பார். இதுவே 'போலீஸ் அக்கா' திட்டம்.நேற்று நடந்த கூட்டத்தில், 'போலீஸ் அக்கா' திட்டம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து, இத்திட்டம் கோவையில் சிறந்த முறையில் செயல்படுத்தப்படுவதாகவும், மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இத்திட்டம் குறித்து, அனைத்து மாவட்ட போலீசாருக்கும் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

GMM
செப் 03, 2024 08:59

மேற்கு வங்கத்தில் போலீசார் நண்பர் நியமனம் பெண் பயிற்சி மருத்துவர் கொலைக்கு காரணம் ? அவர்களுக்கு அரசியல்வாதிகள் போல் பணி ஒழுங்கு இருக்காது. போலீஸ் அக்கா, தங்கை திட்டம் கைவிடுக. மாணவர்கள் , மக்கள் போலீசிடம் நேரடி தொடர்பு கூடாது. போலீசார் பணி காவல். குற்ற தடுப்பு. அரசு நிர்வாகத்திற்கு உதவி புரிதல். மத்திய படையை விலக்கி, உயர் நீதிமன்றம் பாதுகாப்பு பொறுப்பை மேற்கொள்க. போலீசார் நிர்வாகம் புரிந்தால் பாதுகாப்பு பணி செய்ய முடியாது?


சமூக நல விரும்பி
செப் 03, 2024 07:49

எதுகை மோனை எல்லாம் நாலா தான் இருக்கும். ஆனால் முடிவுரை ஒன்றும் இருக்காது.


Raj Kamal
செப் 03, 2024 11:36

நடவடிக்கை எடுத்தால் இந்தமாதிரி நக்கலடிக்கவேண்டியது, எடுக்காவிட்டால் அப்போதும் குற்றம் சொல்லவேண்டியது. மூக்கு கொஞ்சம் புடைப்பா இருந்தால் இப்படிலாம் கமன்ட் பண்ண சொல்லும் போலிரிருக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை