உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓட்டு எண்ணிக்கையில் கவனம் தேவை: பயிற்சி வகுப்பில் கலெக்டர் அறிவுறுத்தல்

ஓட்டு எண்ணிக்கையில் கவனம் தேவை: பயிற்சி வகுப்பில் கலெக்டர் அறிவுறுத்தல்

கோவை;'ஓட்டு எண்ணிக்கையின்போது ஒரு முறைக்கு, இரு முறை சரிபார்த்து மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்' என, ஓட்டு எண்ணும் பயிற்சி வகுப்பில் கலெக்டர் அறிவுறுத்தினார்.கோவை லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை மையம் ஜி.சி.டி., கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் பணியாற்ற மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள், நுண்பார்வையாளர்கள் என, 363 அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு ஆர்.எஸ்., புரம், மாநகராட்சி கலையரங்கில், மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நேற்று ஓட்டு எண்ணும் பயிற்சி வழங்கப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை கமிஷனர் செல்வசுரபி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.அப்போது, கலெக்டர் கிராந்திகுமார் பேசுகையில்,''ஓட்டு எண்ணிக்கை ஜூன், 4ல் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கையின்போது ஒரு முறைக்கு, இரு முறை சரிபார்த்து மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். ஓட்டு விபரங்களை உரிய படிவங்களில் சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். ''ஒவ்வொரு சுற்று முடிவிலும் உரிய அலுவலர்களிடம் கையொப்பம் பெற்று ஓட்டு எண்ணிக்கையை அறிவிக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கை மையத்துக்குள் மொபைல் போன்கள் அனுமதியில்லை.''சரியான நேரத்துக்கு ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு வரவேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ