உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கட்டளைதாரர் நியமிக்க பரிந்துரைக்கவில்லை; மருதமலை அறங்காவலர் குழு தலைவர் தகவல்

கட்டளைதாரர் நியமிக்க பரிந்துரைக்கவில்லை; மருதமலை அறங்காவலர் குழு தலைவர் தகவல்

கோவை : ''மருதமலை சுப்ர மணிய சுவாமி கோவிலுக்கு புதிதாக கட்டளைதாரர்கள், உபயதாரர்களை நியமிக்க யாரையும் பரிந்துரைக்கவில்லை,'' என, கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:

மருதமலை கோவிலில் அறங்காவலர் குழு பதவியேற்ற பின், பல்வேறு மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. மலைப்பாதை சீரமைக்கப்பட்டு இருக்கிறது. படிக்கட்டுகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. வரும் டிச., மாதம் 'லிப்ட்' பயன்பாட்டுக்கு வரும். புதிதாக கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. ஆர்.ஓ., பிளான்ட், கூடுதலாக மின் விளக்குகள், 'சிசி டிவி' கேமரா வசதி செய்யப்படுகிறது. கோவிலை மேம்படுத்த, இன்னும் பல்வேறு திட்டங்கள் வைத்திருக்கிறோம். கோவிலுக்கு கட்டளைதாரர்கள், உபயதாரர்கள் நியமிக்கும் அதிகாரம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு மட்டுமே உள்ளது. அறங்காவலர் குழு தலைவரான பிறகு, புதிதாக யாரையும் கட்டளைதாரர்களாக நியமிக்கவில்லை. கட்டளைதாரர்கள் நியமனம் எனது கவனத்துக்கு வரவில்லை. புதிதாக கட்டளைதாரர்கள், உபயதாரர்கள் நியமிக்க, என்னை யாரும் அணுகவில்லை; அறங்காவலர் குழு பொறுப்பேற்ற பின், புதிதாக யாரையும் நியமிக்க பரிந்துரைக்கவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி