மேலும் செய்திகள்
மாசாணியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு வரவேற்பு
03-Aug-2024
பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் துவங்கியுள்ளன.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, ஆனைமலையில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.மேலும், குண்டம் திருவிழாவுக்கு லட்சக் கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த, 2010ம் ஆண்டு டிச., மாதம் 12ம் தேதி நடந்தது. கும்பாபிஷேக விழா நிறைவடைந்து, 14 ஆண்டுகளான நிலையில், மீண்டும் கும்பாபிேஷகம் நடத்த கோவில் நிர்வாகத்தில் ஆலோசனை நடந்தது. சட்டசபையில் ஹிந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாசாணியம்மன் கோவிலில் கும்பாபி ேஷகம் நடத்தப்படும் என அறிவித்தார். அதன்படி, கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி விமான கோபுரம், ராஜகோபுரம் பாலா லயம் நடந்தது. இதை தொடர்ந்து, 65 அடி உயரம் உள்ள ராஜகோபுரத்துக்கு, 35 லட்சம் ரூபாய் செலவில் வர்ணம் பூசுவதற்காக சாரம் கட்டப்பட்டுள்ளது. சிலைகள் புனரமைப்பு உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.வரும், 2025ம் ஆண்டு ஜன., மாதம் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு திருப்பணிகள் மேற்கொள்வதாக, கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
03-Aug-2024