மேலும் செய்திகள்
சத்துள்ள உணவுப் பொருள்; கர்ப்பிணிகளுக்கு அறிவுரை
24-Feb-2025
சூலுார்; ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், சூலுார் மற்றும் சுல்தான்பேட்டையில் சமுதாய வளைகாப்பு நடந்தது. தனியார் மண்டபத்தில் நடந்த வளைகாப்பில் 100 கர்ப்பிணிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு, பேரூராட்சி தலைவர் தேவி மாலை அணிவித்து, சந்தனம், குங்குமம் வழங்கினார். பழங்கள், சத்துணவு பொருட்கள் வழங்கப்பட்டன.குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஹலீதா ஜெய்னப் பாத்திமா ஊட்டச்சத்து பொருட்களை வழங்கி பேசுகையில்,'' கர்ப்பிணிகள் ஊட்டச்சத்துள்ள உணவு வகைகளை சாப்பிடுவது அவசியம். கீரைகள், பழங்கள் சாப்பிட வேண்டும்.நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். மருத்துவரின் அறிவுறுத்தல் இல்லாமல் எந்த மாத்திரைகளையும் வாங்கி சாப்பிட கூடாது. நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால், குழந்தைக்கும் ஆரோக்கியம் கிடைக்கும்,'' என்றார்.சாமளாபுரத்தில் நடந்த விழாவில், மாவட்ட செயலாளர் முருகேசன், பேரூராட்சி தலைவர் பழனிசாமி ஆகியோர் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கினர். இதேபோல், சுல்தான்பேட்டையில் வளைகாப்பு நடந்தது. திட்ட அலுவலர் சல்மா, ஒன்றிய செயலாளர்கள் மகாலிங்கம், முத்து மாணிக்கம் உள்ளிட்டோர் சீர் வரிசைகளை வழங்கினர்.
24-Feb-2025