உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு மருத்துவமனை வாட்ச்மேனை தாக்கிய கட்டட தொழிலாளி கைது

அரசு மருத்துவமனை வாட்ச்மேனை தாக்கிய கட்டட தொழிலாளி கைது

கோவை;கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் வாட்ச்மேனை தாக்கிய, கட்டட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.போடிபாளையம், கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் மாறன், 70. இவர் ஒப்பந்த அடிப்படையில் கோவை அரசு மருத்துவமனையில் 'வாட்ச்மேனாக' பணியாற்றி வருகிறார். குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 2 பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளி வேலுசாமி, 39 அரசு மருத்துவமனை பயிற்சி டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் விடுதி அருகில், தனது பைக்கை நிறுத்த முயன்றுள்ளார்.அங்கு நிறுத்தக்கூடாது என மாறன் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.வேலுசாமி, மாறனின் முகத்தில் அடித்துள்ளார். கீழே விழுந்த மாறனுக்கு, மூக்கு உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது. புகாரின் பேரில், ரேஸ் கோர்ஸ் போலீசார் வேலுசாமியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை