மேலும் செய்திகள்
வி.இ.டி., கலை கல்லுாரியில் விளையாட்டு விழா
23-Feb-2025
கோவை; க.க.சாவடியில், ஸ்ரீ நாராயண குரு கல்லுாரியில், 'கிரிடைஸ் 2025' கலை விழா கோலாகலமாக நடந்தது. ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் தலைவர் சாத்துக்குட்டி தலைமை வகித்தார்.கேரளாவைச் ேசர்ந்த நாட்டுப்புறப் பாடகர் பிரனாவம் சசி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பண்பாட்டின் அங்கமாக உள்ள கலை, நடனம், ஆடல் ஆகியவை குறித்து உரையாற்றினார். பல்வேறு நாட்டுப்புற பாடல்களைப் பாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். மற்றொரு விருந்தினர் பாடகி பிரியா ஜெர்சன் பல்வேறு பாடல்களை பாடி அசத்தினார். மாணவர்கள் துள்ளி குதித்து மகிழ்ந்தனர். பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் துணைத் தலைவர் சைலஜா, செயலர் ஸ்ரீஹரி, துணை செயலர் பங்கஜ்குமார், பொருளாளர் சஜீஷ்குமார், கல்லூரி முதல்வர் கல்பனா ஆகியோர் பங்கேற்றனர்.
23-Feb-2025