மேலும் செய்திகள்
வாகன விபத்தில் இருவர் காயம்
27-Aug-2024
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையத்தில் அரசு பள்ளி செல்லும் ரோடு சேதமடைந்துள்ளதால் அப்பகுதியினர் அவதிப்படுகின்றனர்.கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையம் அரசு தொடக்கப்பள்ளி செல்லும் ரோட்டின் ஒரு பகுதி மண் ரோடாகவும், மற்றொரு பகுதி கான்கிரீட் ரோடகவும் உள்ளது. இதனால், இவ்வழியில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்படுகின்றனர்.காலை மற்றும் மாலை நேரத்தில், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் பலர் இரு சக்கர வாகனத்தில் வருகின்றனர். மழை காலத்தில் ரோட்டில் ஆங்காங்கே சேறும் சகதியுமாக இருக்கும் போது, பைக்கில் செல்வோர் நிலை தடுமாறி விபத்துக்கு உள்ளாகின்றனர். இந்த ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
27-Aug-2024