உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பல் மருத்துவ மாணவி தற்கொலை

பல் மருத்துவ மாணவி தற்கொலை

பொள்ளாச்சி;பொள்ளாச்சியில், 19வயதான பல் மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.பொள்ளாச்சி ஜோதிநகரை சேர்ந்த கால்நடை டாக்டர் கருப்பையாவின் மகள் ேஷானா,19. இவர், கோவை தனியார் பல் மருத்துவ கல்லுாரியில், பல் மருத்துவம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.அவருக்கு பல் மருத்துவம் படிப்பதில் ஆர்வம் இல்லாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால், படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். கடந்த, ஒரு மாதமாக வீட்டில் இருந்து கல்லுாரிக்கு சென்றதாக கூறப்படுகிறது.இந்நிலையில், அவர், பாத்ரூமில் உள்ள ேஹங்கரில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ