உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இருகூர் சந்திப்பில் மேம்பாட்டு பணி

இருகூர் சந்திப்பில் மேம்பாட்டு பணி

கோவை; இருகூர் சந்திப்பில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு பணிகள் மீதான, பேச்சுவார்த்தை நடந்தது.சரக்கு போக்குவரத்து வாயிலாக, 250 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் இருகூர் சந்திப்பை, இரண்டாவது முனையமாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த, 8ம் தேதி காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.இதையடுத்து, கோரிக்கைகள் குறித்த அமைதிப் பேச்சுவார்த்தை நேற்று முன் தினம் நடந்தது. இதில் இருகூர் ரயில்வே ஸ்டேஷனில், கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள் இயக்குவது குறித்து, சேலம் கோட்ட ரயில்வே துறையுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.முன்னதாக, சூலுார் தாசில்தார் சரண்யா தலைமையில் கூட்டம் நடந்தது. ரயில்வே துறை சார்பில், முதுநிலை சிவில் இன்ஜினியார் சக்திவேல், சிங்காநல்லுார் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், இருகூர் வி.ஏ.ஓ., உதயராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை