உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டிஜிட்டல் முறை மாணவர் தேர்தல்

டிஜிட்டல் முறை மாணவர் தேர்தல்

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கன்பாளையத்தில் யுவா பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில், நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் தலைவர், இதர பொறுப்புகளுக்கான தேர்தல் நடந்தது. இதில், பள்ளி மாணவர் தலைவர், மாணவி தலைவர் மற்றும் பல்வேறு மாணவப் பிரதிநிதிகள், ஜனநாயக முறையில் பூத் அமைத்து, டிஜிட்டல் முறையில், அனைவரும் ஓட்டு அளித்து பிரதிநிதிகளை தேர்வு செய்தனர். தேர்தல் நடைமுறைகள் பள்ளி நிர்வாகத்தின் மேற்பார்வையில் நடந்தன. பள்ளியின் தலைவர் சண்முகம், தாளாளர் சத்யா, முதல்வர் சாகுல் மீரான், துணை முதல்வர் சுருதி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் ஓட்டு போட்டனர். இது குறித்து பள்ளியின் தலைவர் சண்முகம் கூறுகையில், பள்ளி மாணவர்களிடையே தலைமை பண்புகளையும், ஜனநாயக விழிப்புணர்வை வளர்க்கும் வகையில் இந்த தேர்தல் நடந்தது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி