உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கணவனுடன் தகராறு; மனைவி தற்கொலை; பேத்தி மரணம் கண்டு பாட்டியும் தற்கொலை

கணவனுடன் தகராறு; மனைவி தற்கொலை; பேத்தி மரணம் கண்டு பாட்டியும் தற்கொலை

தொண்டாமுத்தூர்; செம்மேட்டில், கணவனுடன் ஏற்பட்ட தகராறில், விஷம் குடித்த இளம்பெண் உயிரிழந்தார். பேத்தியுடன் தற்கொலைக்கு முயன்ற பாட்டியும் உயிரிழந்தார்.செம்மேட்டை சேர்ந்தவர் கவிதா தேவி,42. தனியார் பள்ளியில் நர்ஸ். இவருக்கு திருமணமாகி, சிவசங்கரி,24 என்ற மகள் உள்ளார். கவிதாதேவியுடன், தாய் கன்னியம்மாள்,75 வசித்து வந்தார். கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு சிவசங்கரிக்கு, வாளையாரை சேர்ந்த கோகுல் என்பவருடன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு, 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கோகுல் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த, 12ம் தேதி ஏற்பட்ட தகராறு முற்றியதால், சிவசங்கரி, செம்மேட்டில் உள்ள தனது அம்மாவின் வீட்டிற்கு சென்று விட்டார்.அப்போது, கணவன் கோகுல் போன் செய்து மீண்டும் தகராறு செய்ததால், மனமுடைந்த சிவசங்கரி, பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக்கண்ட சிவசங்கரியின் பாட்டி கன்னியம்மாள், தான் பாசமாக வளர்த்த பேத்தி மருந்து குடித்ததை தாங்கிக்கொள்ளாமல், அவரும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.வீட்டில், மயங்கி கிடந்த சிவசங்கரி மற்றும் கன்னியம்மாளை, உறவினர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சிவசங்கரிக்கு, திருமணமாகி, 3 ஆண்டுகளே ஆகியுள்ளதால், ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை