உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் பசு தானமளித்து ஓ.பி.எஸ்., வழிபாடு

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் பசு தானமளித்து ஓ.பி.எஸ்., வழிபாடு

தொண்டாமுத்துார்;கோவை, பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., பசு தானம் அளித்து, சனிப்பிரதோஷ வழிபாடு செய்தார்.கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், தென்கயிலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., நேற்று மாலை 4:30 மணிக்கு வந்தார். ஒரு மணி நேரத்துக்கு மேலாக தரையில் அமர்ந்து, கோவிலில் நடந்த சனிப்பிரதோஷ பூஜையில் பங்கேற்றார். கன்றுடன் கூடிய பசு மாட்டை, கோவிலுக்கு தானம் வழங்கினார். அதன்பின், விநாயகர், வெள்ளியங்கிரி ஆண்டவர், மனோன்மணி தாயார், நடராஜர் சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, பக்தர்களுடன் வெள்ளியங்கிரி ஆண்டவர் உற்சவர் பல்லக்கை தூக்கி, கோவிலை சுற்றி வலம் வந்தார். பக்தர்கள் அவருடன் 'செல்பி' எடுத்துக்கொண்டனர். கோவிலில் கொடுக்கப்பட்ட சர்க்கரைப் பொங்கல் மற்றும் சுண்டல் பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டு விட்டு, புறப்பட்டுச் சென்றார்.முன்னதாக அவர் கூறுகையில், கோவையில் உள்ள நேச்சுரோபதி சென்டருக்கு வந்திருந்தேன். சனிக்கிழமை பிரதோஷம் என்பதால், பசுமாடு தானம் அளித்து சுவாமி தரிசனம் செய்தேன், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை