உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 12 ஆவணங்கள் பயன்படுத்தி ஓட்டுப்போடலாம்: கலெக்டர்

12 ஆவணங்கள் பயன்படுத்தி ஓட்டுப்போடலாம்: கலெக்டர்

கோவை;ஓட்டளிக்க வாக்காளர் அடையாள அட்டை தவிர, 12 வகையான ஆவணங்களை எடுத்துச் செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, வரும், 19ம் தேதி நடக்க உள்ளது. கோவை, பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, 3,096 ஓட்டுச் சாவடிகளில், ஓட்டு செலுத்த அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.ஓட்டளிக்க வாக்காளர் அடையாள அட்டை தவிர, ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணி அட்டை, வங்கி பாஸ்புக் (புகைப்படத்துடன் கூடியது), மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை (மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தில் வழங்கப்பட்டது), டிரைவிங் லைசென்ஸ், பான்கார்டு, ஸ்மார்ட் கார்டு, பாஸ்போர்ட், ஓய்வூதிய ஆவணம் (புகைப்படத்துடன் கூடியது), பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்கள் அடையாள அட்டை, அலுவலக அடையாள அட்டை (லோக்சபா, சட்டசபை உறுப் பினர்களுக்கு வழங்கப்பட்டது), இயலாமைக்கான தனித்துவ அட்டை ஆகிய ஆவணங்களை பயன்படுத்தலாம். பூத் சிலிப், வழிகாட்டுதலுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என, கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை