உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போதைப் பாக்கு விற்பனை; கடைகளில் சோதனை

போதைப் பாக்கு விற்பனை; கடைகளில் சோதனை

அன்னுார்; கோவை புறநகர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் போதை ஏற்படுத்தப்படும் பாக்குகள் விற்கப்படுவதாகவும், சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கும் படியும், மாவட்ட நிர்வாகமும், போலீஸ் ரூரல் எஸ்.பி., கார்த்திகேயனும் அறிவுறித்தி உள்ளனர்.இதையடுத்து அன்னுார் பேரூராட்சியில், மெயின் ரோடு, கோவை ரோடு, ஓதிமலை ரோடு பகுதியில், 50க்கும் மேற்பட்ட கடைகளில் நேற்று திடீரென சென்ற பேரூராட்சி அதிகாரிகள், போதை பாக்கு, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்கப்படுகிறதா என்று சோதனை நடத்தினர்.செயல் அலுவலர் கார்த்திகேயன், துப்புரவு மேற்பார்வையாளர் பிரதீப் குமார் மற்றும் அலுவலர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.பேரூராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்பட்டால் பறிமுதல் செய்யப்படும். அபராதம் விதிக்கப்படும். கடைக்கு 15 நாட்கள் சீல் வைக்கப்படும். தொடர்ந்து இரண்டாவது முறை பிடிபட்டால் சிறைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை