உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது.பொள்ளாச்சி கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், இன்று காலை, 11:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை, உடுமலை மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கிறது.பொள்ளாச்சி கோட்ட அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில், கோட்டத்துக்கு உட்பட்ட மின்நுகர்வோர் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இத்தகவலை பொள்ளாச்சி மின்வாரிய செயற்பொறியாளர் ராஜா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி