உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிழக்கு குறுமைய டென்னிகாய்ட் : கவனம் ஈர்த்த மாணவ, மாணவியர்

கிழக்கு குறுமைய டென்னிகாய்ட் : கவனம் ஈர்த்த மாணவ, மாணவியர்

கோவை : கிழக்கு குறுமைய 'டென்னிகாய்ட்' போட்டியில், ஏ.பி.சி., மற்றும் ஜி.ராமசாமி நாயுடு மெட்ரிக் பள்ளி அணிகள் ஒற்றையர், இரட்டையர் பிரிவு போட்டிகளில் அசத்தின.பள்ளி கல்வித்துறை சார்பில், 2024-25ம் கல்வியாண்டு குடியரசு தினம் மற்றும் பாரதியார் தின விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன. இதன் ஒருபகுதியாக கிழக்கு குறுமைய, 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியருக்கான 'டென்னிகாய்ட்' போட்டி, ஜி.ராமசாமி நாயுடு மெட்ரிக் பள்ளியில், கடந்த இரு நாட்கள் நடந்தது. இதில், ஒற்றையர், இரட்டையர் உட்பட ஒவ்வொரு பிரிவிலும், 16 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில், மாணவர்களுக்கான, 14 வயதுக்குட்பட்டோர் இரட்டையர் பிரிவில், ஏ.பி.சி., மெட்ரிக் பள்ளி அணி புனித பிலோமினா பள்ளி அணியை வென்றது.ஒற்றையர் மற்றும் இரட்டையர், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில், ஏ.பி.சி., பள்ளி அணி, புனித ஜோசப் மெட்ரிக் பள்ளி அணியை வென்றது. 19 வயதுக்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி அணி, புனித ஜோசப் மெட்ரிக் பள்ளி அணியை வென்றது.அதேபோல், இரட்டையர் பிரிவில் ஏ.பி.சி., மெட்ரிக் பள்ளி அணி, ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி அணியை வென்றது. மாணவியருக்கான, 14 வயதுக்குட்பட்டோர் ஒற்றையர் பிரிவில், ஜி.ராமசாமி நாயுடு மெட்ரிக் பள்ளி அணி, புனித ஜோசப் மெட்ரிக் பள்ளி அணியை வென்றது.இரட்டையர் பிரிவில், ஜி.ராமசாமி நாயுடு மெட்ரிக் பள்ளி அணி, ஒண்டிப்புதுார் ஆர்.சி.ஜி.எச்.எஸ்.எஸ்., பள்ளியை வென்றது. 19 வயதுக்குட்பட்டோர் ஒற்றையர் பிரிவில், ஜி.ராமசாமி நாயுடு மெட்ரிக் பள்ளி அணி, புனித ஜோசப் மெட்ரிக் பள்ளி அணியை வென்றது.இரட்டையர் பிரிவில், ஒண்டிப்புதுார் ஆர்.சி.ஜி.எச்.எஸ்.எஸ்., பள்ளி, பி.எஸ்.ஜி.ஆர்., கன்யா குருகுலம் பள்ளி அணியை வென்றது. வெற்றி பெற்ற அணியினரை, பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !