இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
கோவை. ஜூன் 6 –: பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் காஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இ.கம்யூ., சார்பில், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இ.கம்யூ., மாவட்ட செயலாளர் சிவசாமி தலைமை வகித்தார். மாநில பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட துணை செயலாளர் தங்கவேல், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.