உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேரன், பேத்திகளுடன் காது குத்திய முதியவர்கள்

பேரன், பேத்திகளுடன் காது குத்திய முதியவர்கள்

சூலுார்; பேரன், பேத்திகளோடு முதியவர்கள் காது குத்திக்கொண்ட விழா காடாம்பாடி புதுாரில் நடந்தது.குழந்தைகளுக்கு காதணி விழா நடத்துவது வழக்கம். ஆனால், பேரன் பேத்திகளோடு, 70 வயது முதியவர்களும் காது குத்தி கொண்ட விழா காடாம்பாடி புதூரில் 60 ஆண்டுகளுக்கு பிறகு நடந்ததுள்ளது. இதுகுறித்து கொங்கு வேளாளர் சமுதாய முழுக்காதன் குல முதியவர்கள் கூறியதாவது:எங்கள் குலதெய்வ கோவில் காடையூரில் உள்ளது. எங்கள் குலத்தில் சீர்கள் அதிகம். சீர்காரர், அருமைகாரர் என, எங்களை அழைப்பது வழக்கம். எழு திங்கள் சீர், முழுகாது சீர் எங்கள் குலத்தில் முக்கியமானது.இந்த சீர்கள் செய்வோருக்கு கட்டாயம் இரு குழந்தைகள் இருக்க வேண்டும். சுரேஷ் - வினோதினி தம்பதியின் குழந்தைகளுக்கு நடந்த காதணி விழாவில், இதுவரை காது குத்திக் கொள்ளாத, மூன்று வயது முதல், 70 வயது முதியவர்கள், 15 பேர் காது குத்தி கொண்டோம். இதுபோன்று குல தெய்வ கோவிலில் நடப்பதுதான் வழக்கம். 60 ஆண்டுகளுக்கு முன் எப்படி நடந்ததோ, அதேபோல், எங்கள் ஊரில் உள்ள மூடியம்மன் கோவிலில் தற்போது நடந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை