ரேஷன் கடையில் தே.எண்ணெய் விற்க விவசாயிகள் வலியுறுத்தல்
சூலுார்; ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விற்கக் கோரி, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் செஞ்சேரிமலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில், செஞ்சேரிமலை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.இறக்குமதி செய்யப்பட்டு ரேஷன் கடைகளில் விற்கப்படும் பாமாயிலை நிறுத்திவிட்டு, உள்ளூரில் உற்பத்தி ஆகும் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்ய வேண்டும், என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.சங்க அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டடது. முன்னதாக, விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மார்ச் 4ல் பொள்ளாச்சி - தாராபுரம் ரோட்டில் உள்ள மண்டபத்தில் நடக்கும், கள் விடுதலை கருத்தரங்கில் பங்கேற்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாநில செயலாளர் சந்திரசேகர், பிராசர குழு தலைவர் மணி, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கோபால்சாமி, ரங்கசாமி, நிஷாந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.