உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதலாமாண்டு வகுப்பு துவக்கம்

முதலாமாண்டு வகுப்பு துவக்கம்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி சக்தி தகவல் மேலாண்மைக் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவ மாணவியருக்கு கல்விக்கான அறிமுக வகுப்பின் துவக்க விழா நடந்தது.கல்லுாரி இயக்குனர் (பொறுப்பு) சர்மிளா, அனைவரையும் வரவேற்றார். பின்னர், கல்லுாரியின் உள்கட்டமைப்பு வசதிகள், அண்ணா பல்கலை தரவரிசை பட்டியலில் இடம் பெறுவது விளக்கிப்பேசினார்.கல்லுாரி தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகித்து பேசுகையில், ''வாய்ப்புகள் அனைவருக்கும் பொதுவாக உள்ளது. அதனை பயன்படுத்தும் வழிமுறை, அவரவரின் கைகளில் மட்டுமே உள்ளது. தொழில் முனைவோராக, ஆர்வம், விடாமுயற்சி, தைரியம், மாற்றி யோசிக்கும் திறன் மற்றும் துறை சார்ந்த அறிவு அவசியம்,'' என்றார்.மேலாண்மை ஆலோசகர் ராம்ஜி ராகவன், 'ஆசைகள் முதல் சாதனைகள் வரை' என்ற தலைப்பில் பேசினார். இதில், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பேராசிரியர் தியாகு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை