உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / செண்பகம் பள்ளியில் உணவுத் திருவிழா

செண்பகம் பள்ளியில் உணவுத் திருவிழா

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, செண்பகம் மெட்ரிக் பள்ளியில் மழலையர்களுக்கான உணவுத் திருவிழா நடத்தப்பட்டது. பள்ளி தாளாளர் பினுயேசுதாஸ் தலைமை வகித்தார். முதல்வர் மெக்டலின், துணை முதல்வர் சத்யசந்தானகவுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில், உடலுக்கு நன்மை தரும் உணவுகள், தீமை தரும் உணவுகள் என்ற தலைப்புகளில் பல்வேறு வகையான உணவு பெருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.அதேநேரம், மாணவ, மாணவியர் துரித உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்டு உள்ள பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது. பாரம்பரிய உணவுகளை உட்கொள்வதன் வாயிலாக, ஆரோக்கியமான வாழ்வை பெற முடியும், என, தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி