மேலும் செய்திகள்
மின்வேலியில் சிக்கி காட்டு யானை பலி
18-Aug-2024
மேட்டுப்பாளையம்;காரமடை குமரன் குன்றில் விஷம் கலந்த உணவை சாப்பிட்ட மைனா, மயில் மற்றும் ஆடுகள் உயிரிழந்தன. இதுகுறித்து, காரமடை வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.காரமடை அருகே குமரன் குன்று பகுதியில் பழமை வாய்ந்த கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.குன்று மேல் உள்ள இந்த கோவிலுக்கு அருகில் உள்ள மரங்களில் மயில், மைனா, சிட்டுக்குருவிகள் உள்ளிட்ட பறவைகள் வசித்து வருகின்றன. மேலும், இப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் இந்த கோவிலை சுற்றியுள்ள கிரிவலப் பாதை பகுதியில், மர்ம நபர்கள் சிலர் உணவில் விஷத்தை கலந்து, பல்வேறு இடங்களில் தட்டுகளில் வைத்து விட்டு சென்றுள்ளனர்.இந்த உணவை உட்கொண்ட 7 மயில்கள், ஒரு மைனா, மூன்று ஆடுகள் பல்வேறு இடங்களில் நேற்று உயிரிழந்து கிடந்தது. இது குறித்து காரமடை வனத்துறையினருக்குதகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில்,சம்பவ இடத்துக்கு வந்த காரமடை வனசரகர் ரஞ்சித், மற்றும் வனத்துறையினர் உயிரிழந்த பறவைகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர். மேலும், விஷம் வைத்த மர்மநபர்கள் குறித்து வனத்துறையினர் புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம்அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும்ஏற்படுத்தியுள்ளது.--
18-Aug-2024