உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தடய மொழியியல் பயிலரங்கு

தடய மொழியியல் பயிலரங்கு

கோவை: பாரதியார் பல்கலை  மொழியியல் துறை மற்றும் ரூசா 2.0 திட்டத்தின் நிதியுதவியுடன், ‘தடய மொழியியல்: படைப்பாளி மற்றும் பேசுபவர் இனம் காணல்’  என்ற தலைப்பில் மூன்று நாள் பயிற்சிப் பட்டறை  நடந்தது. பதிவாளர் ராஜவேல் தலைமை வகித்தார். கேரள மத்தியப பல்கலை மொழியியல் துறையின் முன்னாள் பேராசிரியர்  ராமமூர்த்தி , குற்றவியல் புலனாய்வு, சட்ட நடைமுறைகள் மற்றும் இணையவழிக் குற்றங்களில் தடய மொழியியலின் முக்கியத்துவம் குறித்து பேசினார். பயிற்சியில், எழுத்துப்பூர்வ சான்றுகளின் மூல படைப்பாளி இனம்காணல் , குரல் பதிவுகளைக் கொண்டு பேசுபவரை இனம்காணல் மற்றும் தடய மொழி பகுப்பாய்வு முறைகள் குறித்த கோட்பாட்டு மற்றும் செயல்முறைப் பயிற்சி வழங்கப்பட்டன. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை