உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பி.எஸ்.என்.எல். நிறுவன விழா பேரணி

பி.எஸ்.என்.எல். நிறுவன விழா பேரணி

கோவை: பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 26 ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி, ரேஸ்கோர்சில் பேரணி நடந்தது. பி.எஸ்.என்.எல். மக்கள் தொடர்பு அதிகாரி மூர்த்தி கூறியதாவது: தொலை தொடர்பு துறை வளர்ச்சியில் பி.எஸ்.என்.எல். முக்கிய பங்காற்றுகிறது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உபகரணங்களை கொண்டு, 4ஜி மொபைல் கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை தொலைத்தொடர்பு வசதி இல்லாத கிராமங்கள் மற்றும் மலைவாழ் மக்கள் பகுதிகளிலும் மொபைல் மற்றும் இணையதள சேவைகளை பெறலாம். கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் தரைவழி காப்பர் கேபிள்கள் நீக்கப்பட்டு, கண்ணாடி இழைக் கேபிள் மூலம் தொலைபேசி மற்றும் இணைய சேவை வழங்குவதை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறோம். இவ்வாறு, மூர்த்தி தெரிவித்தார். ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு, கோவை பி.எஸ்.என்.எல். வணிக மேலாளர் சுப்ரமணியம் பரிசு வழங்கினார். … படம் அருள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை