உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு பேர் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு பேர் கைது

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு பேரை, தாலுகா போலீசார் கைது செய்தனர்.பொள்ளாச்சியை சேர்ந்த கார்த்திக்கேயன், 39; உர வியாபாரம். இவர், இருசக்கர வாகனத்தில், பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டின் அருகே நின்று, மொபைல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென்று அவரை தாக்கி, இருசக்கர வாகனம், மொபைல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு சென்றனர். இது குறித்து கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில், தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரித்தனர்.போலீசார் கூறியதாவது:கார்த்திக்கேயனுக்கு மிஸ்டு கால் வாயிலாக அபிராமி, 21, என்ற பெண் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. அவர், அவ்வப்போது பணம் கேட்டு வந்ததாக தெரிகிறது.சம்பவத்தன்று, கோவை உடையம்பாளையத்தை சேர்ந்த வினோத்,25, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ஸ்டாலின், 27, யோகேஷ், 27 ஆகியோருடன் அபிராமியும் சேர்ந்துபணம் வாங்கும் நோக்கத்தோடு வந்தனர்.பின்னர், அவரை தாக்கிவிட்டு, மொபைல்போன், இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றனர்.இவற்றை கொடுக்க வேண்டுமென்றால், பணம் கொடுக்க வேண்டுமென மிரட்டியது தெரிகிறது.இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை செய்த போது, தெரிய வந்தது. அவர்களை, கோவையில் வைத்து கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !