உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கைவினை பொருட்கள் தயாரித்தல் இலவச பயிற்சி நிறைவு

கைவினை பொருட்கள் தயாரித்தல் இலவச பயிற்சி நிறைவு

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் கைவினை பொருட்கள் தயாரித்தல் இலவச பயிற்சி நிறைவு விழா நடந்தது.பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தேசிய மனித மேம்பாட்டு மையம் சார்பில், ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பல்வேறு சமூக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சுயதொழில் இலவச பயிற்சி வகுப்புகளும் நடந்து வருகின்றன. இங்கு கடந்த ஒரு வார காலமாக கைவினை பொருட்கள் தயாரித்தல் இலவச பயிற்சி வகுப்புகள் நடந்தன. பயிற்சியில் லிக்யூட் எம்பிராய்டரி, பாட் பெயிண்டிங், டெரகோட்டா ஜுவல்லரி, பேட்ச் ஒர்க், கிளாஸ் பெயிண்டிங், கிப்ட் பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு கைவினை பொருட்கள் தயாரித்தல் இலவச பயிற்சி வகுப்புகள் நடந்தன. பயிற்சி நிறைவு விழாவில், மூலப்பொருள்கள் கொள்முதல் செய்வது, தயாரித்த கைவினை பொருட்களை சந்தைப்படுத்துவது பற்றிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், இது தொடர்பாக சுயதொழில் செய்பவருக்கு வங்கி கடன் பெறும் ஆலோசனையும் வழங்கப்பட்டன. பயிற்சியில், 30க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சரசு, மைய இயக்குனர் சகாதேவன் ஆகியோர் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை