உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / களிமண், பேப்பர் கூழ், கிழங்கு மாவால் விநாயகர் சிலைகள்

களிமண், பேப்பர் கூழ், கிழங்கு மாவால் விநாயகர் சிலைகள்

மேட்டுப்பாளையம்;அரசின் விதிமுறைக்கு உட்பட்டு பேப்பர் கூழ், கிழங்கு மாவு மற்றும் களிமண்ணால் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் ஏழாம் தேதி நடைபெற உள்ளது. இதை அடுத்து விநாயகர் சிலைகள் செய்யும் பணியானது, துரிதமாக நடைபெற்று வருகின்றன. மேட்டுப்பாளையத்தில் பழனிசாமி என்பவர் அரசின் விதிமுறைக்கு உட்பட்டு, விநாயகர் சிலைகள் செய்து வருகிறார். அரை அடியிலிருந்து, நான்கு அடி வரை சிலைகள் ஒரு விதமாகவும், நான்கு அடியிலிருந்து, எட்டு அடி வரை சிலைகள் ஒரு விதமாகவும் செய்து வருகிறார். இதுகுறித்து விநாயகர் சிலைகள் செய்யும், பழனிசாமி கூறியதாவது: அரசின் விதிமுறைக்கு உட்பட்டு, பிளாஸ்டாப் பாரிஸ் பொருளை பயன்படுத்தாமல் விநாயகர் சிலைகள் செய்யப்படுகின்றன. களிமண், பேப்பர் கூழ், கிழங்கு மாவு ஆகிய மூன்றையும் பயன்படுத்தி, விநாயகர் சிலைகள் செய்யப் படுகின்றன. அரை அடியிலிருந்து நான்கு அடி வரை உள்ள சிலைகள் அனைத்தும், களிமண்ணால் செய்யப்படுகின்றன. நான்கு அடியிலிருந்து எட்டு அடிக்கு வரை உள்ள சிலைகள், பேப்பர் கூழ் மற்றும் கிழங்கு மாவு ஆகிய இரண்டையும் பயன்படுத்தி செய்யப்படுகின்றன. இந்த சிலைகளுக்கு வாட்டர் பெயிண்ட் அடிக்கப்படுகிறது. இதன் வாயிலாக எவ்வித சுற்றுப்புற சூழலும் பாதிப்பு ஏற்படாது. அனைத்து சிலைகளும் அரசின் விதிமுறைக்குட்பட்டு செய்யப்படுகின்றன. இதுவரை, 500க்கும் மேற்பட்ட சிறியதும், பெரியதுமான களிமண் சிலைகள் செய்யப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட பேப்பர் கூழ் மற்றும் கிழங்கு மாவு சிலைகள் செய்யப்பட்டுள்ளன. எனவே தொடர்ந்து ஆர்டர்கள் கிடைத்து வருவதால், களிமண் சிலைகள் அதிக அளவில் செய்யப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ