உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விநாயகர் விசர்ஜனம் இணைப்பு

விநாயகர் விசர்ஜனம் இணைப்பு

பெரியநாயக்கன்பாளையம் சப் டிவிஷனுக்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், இடிகரை, சின்னதடாகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்வேறு ஹிந்து அமைப்புகளின் சார்பில், 152 சிலைகள் வெள்ளக்கிணறு குளத்துக்கு வாகனங்களில் எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், வெள்ளக்கிணறு, எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் கவுண்டம்பாளையம் துடியலுார் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விநாயகர் சிலைகள் கொண்டு வருகின்றனர். குளத்தைச் சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மின்விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கொண்டு வரப்படும் சிலைகளை பாதுகாப்பாக வாங்கி குளத்துக்குள் கரைக்க நீச்சல் தெரிந்த நபர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி