உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குவிந்து கிடக்கிறது குப்பை: சுகாதாரம் போயேபோச்சு!

குவிந்து கிடக்கிறது குப்பை: சுகாதாரம் போயேபோச்சு!

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அண்ணா நகர் பகுதியில் குப்பை குவிந்து கிடப்பதை, முறையாக அகற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.பொள்ளாச்சி நகராட்சி 4வது வார்டுக்கு உட்பட்ட, அண்ணா நகர், வி.கே.வி., லே -- அவுட் பகுதியில், 1,500 குடும்பங்கள் வசிக்கின்றன. மேலும், அரசு பஸ் டிப்போக்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் அதிகளவு உள்ளன.இப்பகுதியில், கோவை ரோடு சி.டி.சி., மேடு பிரிவில் இருந்து வடுகபாளையம் செல்லும் ரோட்டில், குப்பை அதிகளவு தேங்கிக்கிடக்கின்றன. இதனால் சுகாதாரம் பாதிக்கிறது.அண்ணா நகர், வி.கே.வி., லே - அவுட் பகுதி மக்கள் கூறியதாவது:வடுகபாளையம் ரயில்வே கேட் வரை ரோட்டின் இருபுறமும் குப்பை, இறைச்சி கழிவு, ேஹாட்டல் கழிவு, மருத்துவ, கட்டட மற்றும் ஒர்க் ஷாப் கழிவுகள் வாகனங்களில் கொண்டு வந்து கொட்டிச் செல்கின்றனர்.இதனால், இப்பகுதி முழுவதும் குப்பை குவிந்து, கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுற்றுச்சூழல் மாசுபட்டு நிலத்தடி நீர் பாதிக்கப்படும் நிலை உள்ளது.ஒரு சில நேரங்களில் கழிவுகளுக்கு தீ வைத்தும் எரிப்பதால் அவ்வழியாக செல்வோர் கண் எரிச்சல், சுவாச கோளாறு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.மேலும், தீ வைப்பதால் இந்த ரோட்டில் சில பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த மரக்கன்றுகளும் கருகியுள்ளது.சுகாதார சீர்கேட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளோம்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை