உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பஸ் பயணத்தில் தங்க நகை மாயம்

பஸ் பயணத்தில் தங்க நகை மாயம்

போத்தனூர் : கோவை குனியமுத்தூர் அடுத்த பி.கே.புதூர், திருநகர் காலனியை சேர்ந்தவர் அமுதா, 52. நேற்று முன்தினம் மாலை உக்கடத்திலிருந்து, பி.கே.புதூருக்கு அரசு டவுன் பஸ்சில் பயணித்தார். பி.கே.புதூரில் வந்திறங்கியபோது, தனது கழுத்திலிருந்த இரண்டரை சவரன் தங்க நகையை காணாமல் அதிர்ச்சியடைந்தார். இவரது புகாரின்படி, குனியமுத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ