உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பள்ளியில் பொன்விழா

அரசு பள்ளியில் பொன்விழா

மேட்டுப்பாளையம்; சிறுமுகைப்புதுார் வடக்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், பொன்விழா நடந்தது. சிறுமுகைப்புதுார் வடக்கில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி துவங்கி, 50 ஆண்டுகள் ஆனதை அடுத்து, பொன்விழா நடந்தது. விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை ராதாமணி ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியர் சித்ரா வரவேற்றார். தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், கவுன்சிலர் ரியாஸ், பூர்ணிமா, பிரியா, குணா ஆகியோர் பரிசுகளை வழங்கி பேசினர். விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் பங்கேற்றனர். ஆசிரியை கலைச்செல்வி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை