உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கல்

மேட்டுப்பாளையம்;காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் சென்ற கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ராமதாஸ் தலைமை தாங்கினார். வெள்ளியங்காடு ஊராட்சி தலைவர் ஜெயமணி முன்னிலை வகித்தார்.ராமகிருஷ்ணா விஜயலட்சுமி அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் பள்ளி வளர்ச்சிக்காக ரூ 1,14,000 நிதி வழக்கப்பட்டது. முன்னாள் மாணவர் சுதாகரன் என்பவரும் ரூ 25,000 உதவித் தொகையை மாணவர்களுக்கு வழங்கினார். விழாவில் தலைமை ஆசிரியர் சாக்ரடீஸ் குலசேகரன், டாக்டர் குருமூர்த்தி, செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ