உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் தொழில்நுட்பம் பரவலாக்க வழிகாட்டுதல்

வேளாண் தொழில்நுட்பம் பரவலாக்க வழிகாட்டுதல்

கோவை:சிறு, குறு படத்தொகுப்பு வாயிலாக, துல்லிய வேளாண்மை தொழில்நுட்பங்களை, விவசாயிகளுக்கும், விரிவாக்கப் பணியாளர்களுக்கும், எளிதில் புரியும் வகையிலான விஷயங்கள், இணைய வழி பயிற்சியில் வழங்கப்பட்டது.கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் விரிவாக்க கல்வி இயக்கக பயிற்சி பிரிவு மற்றும் ஐதராபாத் தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனம் இணைந்து, குறு வீடியோ வாயிலாக, வேளாண் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றம் என்ற தலைப்பில், இணைய வழியாக மூன்று நாள் பயிற்சி நடந்தது.தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக விரிவாக்க கல்வி இயக்குனர் முருகன் துவக்கி வைத்து, ''இணையவழி கற்றலின் வாயிலாக, முழுமையாக பயன் அடையாவிட்டாலும், அறிவுப்பூர்வமாக விஷயங்களை உள்வாங்கி தொடர் பயிற்சி மற்றும் முயற்சி வாயிலாக மேற்கொள்ள முடியும்,'' என்றார்.சிறு, குறு படத்தொகுப்பின் வாயிலாக, துல்லிய வேளாண்மை தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கும், விரிவாக்கப் பணியாளர்களுக்கும், எளிதில் புரியும் வகையிலான விஷயங்களை, பயிற்சி பிரிவின் தலைவர் ஆனந்தராஜா விளக்கினார். பயிற்சி குறித்து, இணை பேராசிரியர் சிந்தியா பெர்னாண்டஸ், உதவி பேராசிரியர் ஸ்ரீதர் ஆகியோரும், தொழில்நுட்பம் குறித்து பேசினர்.பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 130க்கும் மேற்பட்ட விரிவாக்கப் பணியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் முதுகலை, முனைவர் பட்டப்படிப்பு மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை