உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரேஷன் அரிசி கடத்தியவர் மீது 5வது முறையாக குண்டாஸ்

ரேஷன் அரிசி கடத்தியவர் மீது 5வது முறையாக குண்டாஸ்

பொள்ளாச்சி, ; கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தியவர் மீது ஐந்தாவது முறையாக குண்டர் சட்டம் பாய்ந்தது.குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை டி.எஸ்.பி., மரியமுத்து மேற்பார்வையில், பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை எஸ்.ஐ., பாரதிராஜா மற்றும் குழுவினர், கடந்த மாதம், 18ம் தேதி கோவை - குனியமுத்துார்- இடையர்பாளையம் பகுதியில், வாகனங்கள் வாயிலாக 2,625 கிலோ ரேஷன் அரிசி சேகரித்து கேரளாவில் கள்ள சந்தையில் விற்று லாபம் பார்க்க முயன்ற, கோவையை சேர்ந்த காஜா என்கிற காஜா மொய்தீன்,45, வெள்ளலுார் சுரேஷ்,45, வாளையாறு புதுச்சேரி பாக்கியராஜ் ஆகியோரை கைது செய்தனர்.அதில், காஜா என்கிற காஜா மொய்தீன் மீது கோவை, பொள்ளாச்சியில், பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. இவர், ஏற்கனவே, நான்கு முறை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தும், மாறாமல் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்.இவர் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன், கோவை சிட்டி போலீஸ் கமிஷனர் சரவணசுந்தருக்கு பரிந்துரை செய்தார்.அதன்பேரில், சிட்டி போலீஸ் கமிஷனர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவரிடம், நகல் வழங்கப்பட்டது. காஜா மொய்தீன் மீது ஐந்தாவது முறையாக குண்டர் சட்டம் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை