உள்ளூர் செய்திகள்

குட்கா விற்றவர் கைது

தொண்டாமுத்தூர்; பேரூர் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில், டி.எஸ்.பி., சிவக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பேரூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட, தீத்திபாளையம், ஏ.கே.சி., அவென்யூ பேஸ் 2 பகுதியில் உள்ள மளிகை கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலை பொருட்கள் அதிக அளவு விற்பனை செய்யப்படுவதாக, ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு சென்று சோதனை செய்தபோது, குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, குட்கா பொருட்களை விற்பனை செய்த ஜோசப் இமானுவேல், 46 என்பவரை, பேரூர் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். அவரிடமிருந்து, விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 13 கிலோ 452 கிராம் எடையுள்ள குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ