மேலும் செய்திகள்
தபால் கோட்டம் வாயிலாக கடிதம் எழுதும் போட்டி
30-Jan-2025
கோவை; மனித - வன விலங்கு மோதல்களுக்கு தொழில்நுட்ப ரீதியில் தீர்வு காணும் 'ஹேக்கத்தான் 2025' போட்டி, கோவை வனக்கோட்டம் மற்றும் ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லூரி சார்பில் நடக்கிறது.யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்கான கருவிகள், உபகரணங்கள், எச்சரிக்கை அமைப்பு முறைகள், யானைகளுக்கு உகந்த வேளாண் தீர்வுகள், மனித - வனவிலங்கு முரண்பாடுகளுக்கு ஏ.ஐ., உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தீர்வு காணுதல் உள்ளிட்ட பிரிவுகளில் தீர்வுகள் முன்வைக்கப்பட வேண்டும்.மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பங்கேற்று தங்களது தீர்வுகளை முன்வைக்கலாம். வரும் 28ம் தேதி முதல்சுற்று தேர்வு நடக்கும். இறுதிப் போட்டி, வரும் மார்ச் 14, 15ம் தேதிகளில் ராமகிருஷ்ணா கல்லூரியில் நடக்கும். விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். முதல் மூன்று பரிசுகளாக முறையே ரூ. 25 ஆயிரம், ரூ. 15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 91590 75214, 99524 37272 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
30-Jan-2025