முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களுக்கு உதவி
கோவை; கோவையில், முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களுக்கு, தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன.கோவையில், பல்வேறு இடங்களில், மகளிர் தின விழாக்கள் கொண்டாடப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட வங்கி ஊழியர் சங்கம் மற்றும் யூனியன் வங்கி ஊழியர் சங்கம் சார்பில், மகளிர் தினத்தை முன்னிட்டு, கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில், நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இதில், 80 பேர் வசிக்கும் நிலையில், அவர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன. யூனியன் வங்கியின் கோவை மண்டல துணை மேலாளர் முருகானந்தம் உட்பட, சங்கத்தினர் பங்கேற்றனர். இது போன்ற நிகழ்ச்சிகள், தங்களுக்கு நெகிழ்ச்சி தரக்கூடியதாக உள்ளதாக, முதியோர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.