| ADDED : ஜூலை 08, 2024 12:35 AM
சூலுார்;காய்கறிகள், பழங்கள் சேகரிக்க பயன்படும் சிப்பம் கட்டும் அறை கட்ட, தோட்டக்கலைத்துறை சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. சுல்தான்பேட்டை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ரமேஷ் அறிக்கை:சுல்தான்பேட்டை வட்டாரத்தில் அப்பநாயக்கன்பட்டி, செஞ்சேரிபுத்துார், பச்சாபாளையம், குமாரபாளையம் ஆகிய ஊர்களில் ஒருங்கிணைந்த கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இங்கு, தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில், காய்கறிகள், பழங்கள் சேகரித்து சிப்பம் கட்ட பயன்படும் அறை கட்ட, இரண்டு லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்பட உள்ளது. அறை கட்ட விரும்பும் விவசாயிகள், ஆதார், ரேஷன் அட்டை நகல், சிட்டா, அடங்கல், நில வரைபடம், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் சுல்தான்பேட்டை ஒன்றிய அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை வேலை நாட்களில் அணுகி பயன்பெறலாம்.