தொற்றுநோய்களை தடுப்பது எப்படி?
கோவை:மாவட்ட சுகாதார துறை சார்பில், 'தொற்றுநோய்களைத் தடுத்தல் மற்றும் மேலாண்மை' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.கோவை அரசு மருத்துவமனை, பொதுமருத்துவத் துறை டாக்டர் சிவக்குமார், குழந்தைகள் நல டாக்டர் சசிகுமார், இ.எஸ்.ஐ., மருத்துவமனை இணை பேராசிரியர் கருப்பசாமி ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர். பல்வேறு மருத்துவமனைகளின் பிரதிநிதிகள், மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் ராஜசேகரன், துணை இயக்குனர் அருணா, மாநகர நகர் நல அலுவலர்(பொறுப்பு) பூபதி பங்கேற்றனர்.